பாலைகளில் நீர் தேடும் பயணம்...என் ஜனனம்...
வாழ்வின் வசந்தத்தை தேடும் படலம்...நான் நடமாடும் உயிரில்லா சடலம்...
தனிமைகாட்டில் துணையை தேடும் தேடல்...என் வாழ்க்கை அச்சில் ஏறாத பாடல்..
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை...சுற்றங்களே இல்லை!...குற்றம் எங்கு காண்பது..?
உறவுகளில்லா உலகினை வெறுத்ததுண்டு..தனிமையில் பல நேரங்கள் தனிமையில் அழுததுண்டு...
என் இயல்வாழ்க்கையில் அடையாத பந்தம்...இணைய நட்பில் அடைந்த ஆனந்தம்...
தோள் தாங்கும் தோழன் தோள் சாயும் தோழி பரிகாச பாசத்தோடு தங்கை சிரித்து பேச சிநேகிதி...
என் பாலை நிலத்திலும் சந்தோச நீரூற்றுகள்..!
என் வறண்ட வானிலையிலும் மகிழ்மழை மேகங்கள்!!


நட்புகளின் இனிய தருணங்கள்..!.....arumai
ReplyDeleteநன்றி பிரேமா...
ReplyDelete